சனி, 13 மே, 2017

நிதானமின்மை

இதை எப்படி என்று நீண்ட நேரம் நினைத்து கொண்டுஇருந்தேன்.
ஆனால் இந்தச் செயல்களின் மூலத்தை அரிவது மிகவும் கடினமாக உள்ளது. இன்று மிதிவண்டி பயணம்என்பதை நேற்றே முடிவு செய்து விட்டேன். இன்று ஒரு முறை வானிலை அறிக்கையை இணையத்தில்கண்டு உறுதி படுத்திக் கொண்டேன். மேலும் வரைபடத்தையும் சரியான பாதையையும்குறித்துக்கொண்டேன். எல்லா திட்டமிடுதலும் சரியாக நடந்தது ஆனால் ஒன்றைத் தவிர. எந்த உடைஅணிவது என்ற திட்டம் என்னிடம் இல்லை. அது இருந்து இருந்தால் இது நடந்து இருக்காது என்றுஉறுதியாகக் கூற முடியவில்லை இருந்தாலும் அதுதான் காரணம் எண்-ஒன்று

நான் எடுத்துக்கொள்ள வேண்டிய பொருட்களை பற்றிய விவரம் தயார் செய்யப்படவில்லை அது காரணம்எண்- இரண்டு.

மிதிவண்டியை எடுத்துக்கொண்டு புறப்படுவதற்கு முன்னால் சிறிது நேரம் அமைதியாக எந்தப்பொருட்களை எங்கே வைத்து உள்ளோம் என்பதைச் சோதனை செய்து பார்த்து இருக்க வேண்டும்.

மிகவும் முக்கியமான காரணம் - நிதானமின்மை.
நிதானம் இல்லாமல் தான் வீட்டின் சாவியை எங்கே வைத்தேன் என்பதை மறந்து விட்டு, வைக்காத ஒருஇடத்தில் தேடி அங்கே கிடைக்காத தருணத்தில் சாவி எங்கேயோ விழுந்து விட்டது என்று எண்ணிக்கொண்டேன்.

இந்த நிதானமின்மைக்கு நான் கொடுத்த விலை என்ன தெரியுமா ?
ஐந்நாறு ஸ்விடிஷ் கொரொனா. அதாவது இந்திய மதிப்பில் நான்காயிரம்.

ஒரு நன்மை நடந்து இருந்தது. அது நான் எனது அண்டை வீட்டில் யார் வசிக்றார்கள் என்பது தெரிந்தது. மேலும் அவரிடம் உதவியும் கேட்டு அதை அவர் மனம்உவந்து எனக்குச் செய்தார்.

இதையே ஒரு பாடமாக வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளவேண்டும.

திங்கள், 17 ஏப்ரல், 2017

மறு பிறவி

கண்
                                                             
எங்கள் பகல் கூட உங்க இராத்திரொட இருட்டா இருக்கும்.
இராஜ பார்வை படத்தில் வரும் ஒரு வசனம் (படம் பார்காதவதற்களுக்கு ஒரு சிறு குரிப்பு. தலைவனுக்கு கண் பார்வை இருக்காது அவனின் மாற்றத் திறனை எடுத்துக்காட்டும் விதமாக அவன் தலைவிக்கு கூறும் வசனம்.)
டிசம்பர் 3 உலக மாற்றத் திறனாலிகள் தினம். அதன் காரனமாக நான் தங்கி இருந்த விடுதியில்(டென்மார்க்) ஒரு எற்பாடு செய்து இருந்தார்கள். அந்த நிகழ்வை இரவு உணவோடு இனைந்த ஒரு அருமையான நிகழ்ச்சி. எங்கள் கண்களை கட்டி விட்டு எங்களை அழைத்து சென்று உணவு உண்ணும் மேசை முன்பு இருந்த இருக்கையில் அமர்த்தி விட்டார்கள்.  அப்போழுதுதான் தெரிந்தது கண் இல்லாமல் எவ்வளவு சிரமம் என்று.
ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தோம் அனைவரும்.
பின் எங்களுக்கான ஒரு குழு போட்டி வைத்து இருந்தார்கள். அதுவும் சிரந்ததாகவே இருந்தது. இந்த போட்டியின் நோக்கமே நாம் மாற்றுத் திறனாலியின் சிரமங்களை பற்றி புரிந்து கொள்ள வேன்டும் என்பது மட்டுமே, ஆனால் அதை அவர்கள் செய்த விதம் தான் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எல்லாவற்றையும் ஒரு விளையாட்டு போல் புரியவைத்தார்கள்.அவர்கள் அங்கே பிரசங்கம் செய்ய வில்லை.
ஆனால் அன்று என்னுல் ஏற்பட்ட தாக்கம் இன்றும் மாறாமல் இருக்கிறது.
அது தான் என்னை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது.
ஆம் இரந்த பின் என் உடல் உறுப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் படி செய்துள்ளேன்.

தானம் என்று இதை நான் கூற மாட்டேன். கூறுவது மிகவும் தவறான ஒரு சொல் என்று நான் கறுதுகிறேன்.