திங்கள், 17 ஏப்ரல், 2017

மறு பிறவி

கண்
                                                             
எங்கள் பகல் கூட உங்க இராத்திரொட இருட்டா இருக்கும்.
இராஜ பார்வை படத்தில் வரும் ஒரு வசனம் (படம் பார்காதவதற்களுக்கு ஒரு சிறு குரிப்பு. தலைவனுக்கு கண் பார்வை இருக்காது அவனின் மாற்றத் திறனை எடுத்துக்காட்டும் விதமாக அவன் தலைவிக்கு கூறும் வசனம்.)
டிசம்பர் 3 உலக மாற்றத் திறனாலிகள் தினம். அதன் காரனமாக நான் தங்கி இருந்த விடுதியில்(டென்மார்க்) ஒரு எற்பாடு செய்து இருந்தார்கள். அந்த நிகழ்வை இரவு உணவோடு இனைந்த ஒரு அருமையான நிகழ்ச்சி. எங்கள் கண்களை கட்டி விட்டு எங்களை அழைத்து சென்று உணவு உண்ணும் மேசை முன்பு இருந்த இருக்கையில் அமர்த்தி விட்டார்கள்.  அப்போழுதுதான் தெரிந்தது கண் இல்லாமல் எவ்வளவு சிரமம் என்று.
ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தோம் அனைவரும்.
பின் எங்களுக்கான ஒரு குழு போட்டி வைத்து இருந்தார்கள். அதுவும் சிரந்ததாகவே இருந்தது. இந்த போட்டியின் நோக்கமே நாம் மாற்றுத் திறனாலியின் சிரமங்களை பற்றி புரிந்து கொள்ள வேன்டும் என்பது மட்டுமே, ஆனால் அதை அவர்கள் செய்த விதம் தான் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எல்லாவற்றையும் ஒரு விளையாட்டு போல் புரியவைத்தார்கள்.அவர்கள் அங்கே பிரசங்கம் செய்ய வில்லை.
ஆனால் அன்று என்னுல் ஏற்பட்ட தாக்கம் இன்றும் மாறாமல் இருக்கிறது.
அது தான் என்னை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது.
ஆம் இரந்த பின் என் உடல் உறுப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் படி செய்துள்ளேன்.

தானம் என்று இதை நான் கூற மாட்டேன். கூறுவது மிகவும் தவறான ஒரு சொல் என்று நான் கறுதுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக